புதுப்பாளையத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி
கடலுார் : கடலுார் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. கடலுார் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இன்று (14ம் தேதி) மாலை 4:00 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விசேஷ திருமஞ்சனம், 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. நாளை 15ம் தேதி இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணரூபன், மேலாளர்கள் தீனதயாளன், சண்முகம், பட்டாச்சாரியார்கள் ராஜகோபால பிரபு, நரசிம்மன் செய்கின்றனர். சிறப்பு அபிஷேகத்திற்கு பால், தயிர், தேன் மற்றும் மூலிகை பொருட்களை பக்தர்கள் தந்து பயன்பெறலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.