உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கும்பாபிஷேகம்

 கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனூரில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் வழிபாடு, கடந்த 14 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கியத. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹீதி தீபாராதனையும் நடந்தது. காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடந்தது. நாச்சியார் கோவில் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் பூஜைகளை செய்தனர். மாலை திருக்கல்யாணம் உற்சவமும், இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை