மேலும் செய்திகள்
போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு
06-Dec-2025
காட்டுமன்னார்கோவில்: வேலம் பூண்டியில் குடிபோதையில் வேன் டிரைவரை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கா ட்டுமன்னார்கோவில் அடுத்த வேலம் பூண்டி சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன், 31; வேன் டிரைவர். இவரது நண்பர் குமரவேலுவுடன் நேற்று முன்தினம் சங்கர் மோட்டர் கொட்டகை அருகே பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த, அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் மகன் கூலி தொழிலாளி அருண் (எ) அருண்குமார், 26; இங்கு ஏன் நிற்கின்றீர்கள் என கேட்டு வேல்முருகனிடம் தகராறு செய்து, பீர் பாட்டிலால் தாக்கினார். படுகா யம் அடைந்த வேல்முருகன், குமாரவேல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அருண்குமாரை கைது செய்தனர்.
06-Dec-2025