உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவக் கல்லுாரியில் தொழுநோய் கண்டறியும் முகாம்

மருத்துவக் கல்லுாரியில் தொழுநோய் கண்டறியும் முகாம்

சிதம்பரம், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.மருத்துவக்கல்லுாரி முதல்வர் திருப்பதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் முன்னிலை வகித்தார். தோல் நோய் துறைத் தலைவர் கவியரசன் வரவேற்றார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பாலாஜி சுவாமிநாதன், மருத்துவமனை துணை முதல்வர் சசிகலா, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சித்திரைசெல்வி, தொழுநோய் நிபுணர் மணிவண்ணன் பேசினர்.அனைவரும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ