உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்.ஐ.சி., முகவர் சங்க ஆண்டு விழா

எல்.ஐ.சி., முகவர் சங்க ஆண்டு விழா

மந்தாரக்குப்பம், : நெய்வேலி எல்.ஐ.சி., கிளையில் ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தின் 61ம் ஆண்டு விழா நடந்தது. ஆயுள் காப்பீட்டு கழக தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். மூத்த முகவர்கள் சேகர், இளம்வழுதி ஆகியோர் சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பேசினர். நிர்வாகிகள் தருமலிங்கம், முருகானந்தம், சின்னதுரை பேசினர். 25 ஆண்டுகள் முகவர் பணி நிறைவு செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மூத்த முகவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. விழாவில், துணை பொறுப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள், முகவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் முரளிதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி