உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதல் ஜோடி போலீசில் தஞ்சம்: உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்: உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

நெல்லிக்குப்பம் : காதல் ஜோடி தஞ்சமடைந்த தகவலை அறிந்த உறவினர்கள் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டை சேர்ந்த மணிவண்ணன் மகன் மதிவாணன்,24.குமளங்குளத்தை சேர்ந்த மற்றொரு மணிவண்ணன் மகள் சந்தியா,23.இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.சில நாட்களுக்கு முன் சந்தியா குமளங்குளம் வந்துள்ளார்.அப்போது சந்தியாவும்,மதிவாணனும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து சென்று திருவந்திபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.சந்தியாவின் பெற்றோர் தேடி வந்ததால் நேற்று சந்தியாவும் மதிவாணனும் பாதுகாப்பு கேட்டு நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.இதையறிந்த சந்தியாவின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தததால் பதட்டம் நிலவியது.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை