உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பராமரிப்பின்றி மழைநீர் சேமிப்பு குளம்

 பராமரிப்பின்றி மழைநீர் சேமிப்பு குளம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மழைநீர் சேமிப்பு குளம் கழிவுநீர் சேமிப்பு குளமாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள வரட்டு குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பாழாகியது. அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து குளம் துார்வாரப்பட்டது.குளத்தின் நான்கு புறமும் கருங்கல் சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், குளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்தவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் நகர் பகுதிகளின் கழிவுநீரை, பல லட்சம் செலவு செய்து அழகுபடுத்திய குளத்தில் விட்டனர். இதனால் குளத்தில் கழிவுநீர் தேங்கியது. பராமரிப்பு இல்லாததால் குளம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. குளத்தின் மேல் கரையில் டைல்ஸ் கற்கள் புதைத்து நடைபயிற்சிக்கான நடைபாதை அமைத்தனர். மக்களும் சில நாட்கள் நடைபயிற்சி சென்றனர். கழிவுநீர் தேங்கியதாலும், புதர்மண்டி காணப்படுவதாலும் மக்கள் நடைபயிற்சி செல்லவில்லை. குளத்தை பராமரிக்காததால் மக்கள் வரிப்பணம் பாழாகிறது. இனியாவது குளத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ