உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையாண்டவர் கோவில் பாதை டர்ர்ர்... ரூ. 15 லட்சம் ஒதுக்கியும் பயனில்லை

மலையாண்டவர் கோவில் பாதை டர்ர்ர்... ரூ. 15 லட்சம் ஒதுக்கியும் பயனில்லை

கடலுார் அடுத்த, சி.என்.பாளையத்தின் புகழ்பெற்ற மலையாண்டவர் கோவில் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு பகுதிளில் இருந்து அதிக அளவில் தினமும் பக்தர்கள் வருகின்றனர். கோவில் மலைமீது உள்ளதால், பக்தர்கள் வசதிக்காக, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் பின்பகுதியாக வாகனங்களில் செல்லும் வகையில் தார்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை பராமரிப்பின்றி, தற்போது ஜல்லிகள் பெயர்ந்து, நடந்து செல்ல முடியாத அளவில் கரடு முரடாக உள்ளது. வாகனங்களில் செல்பவர்களும் அடிக்கடி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியிட்டு, பக்தர்கள் பாதிப்பை சுட்டிக்காட்டப்பட்டது.அதையடுத்து, சம்மந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளை, கலெக்டர் அருண் தம்புராஜ் அழைத்து, சாலையை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி, மறுநாளே அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய சிமெண்ட் சாலையாக புதுப்பிக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர். இதனால், சாலை விரைவில் போடப்பட்டுவிடும் என, பக்தர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், நிதி ஒதுக்கி, 6 மாதங்களாகியும் சாலை பணி கிணற்றில் போட்ட கள்ளாகவே உள்ளது. இதனால், பக்தர்களின் பாதிப்பு வழக்கம்போல் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ