உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆபாச பேச்சு ஒருவர் கைது

 ஆபாச பேச்சு ஒருவர் கைது

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே ஆபாசமாக திட்டி தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் சூரியபிரகாஷ், 24; இவர் அதே பகுதியை சேர்ந்த தமது நண்பர் சிவராஜ் என்பவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழிருப்பு நடுத்தெருவை சேர்ந்த ஞானேஷ்குமார், தனபதி ஆகிய இருவரும் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இதை சூரிய பிரகாஷ் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஞானேஷ்குமார், தனபதி ஆகிய இருவரும் சூரியபிரகாசை ஆபாசமாக திட்டி, தாக்கினர். இதில் சூரியபிரகாஷ் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தனபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை