மொபைல் போனில் பேசியபடி சென்றவர் ரயில் மோதி மரணம்
பேராவூரணி:மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றவர் ரயில் மோதி பலியானார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த பிரபாகரன், 34; பேராவூரணி டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, கடையில் இருந்து தங்கியிருக்கும் அறைக்கு, பேராவூரணி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தண்டவாளம் ஒரத்தில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.அப்போது, செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்,பேராவூரணி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தம் இல்லாததால், அதிவேகமாக வந்தது. தண்டவாளத்தில் ஒருவர் நடந்து செல்வதை பார்த்த, ரயில் லோகோ பைலட் ஒலி எழுப்பினார். ஆனால், பிரபாகரன் அதை கவனிக்காமல், மொபைல் போனில் பேசியபடி சென்றதால், ரயில் மோதி துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார் பிரபாகரன் உடலைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.