உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியப்ப வாண்டையார் நூற்றாண்டு மலர் வெளியீடு

மாரியப்ப வாண்டையார் நூற்றாண்டு மலர் வெளியீடு

சிதம்பரம்: சிதம்பரத்தில், மறைந்த மாரியப்ப வாண்டையார், நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது.நிகழ்ச்சியில் மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி அம்பலம் முன்னிலை வகித்தனர்.மாரியப்ப வாண்டையார் படத்தை, தஞ்சாவூர் பழனிவேல் மண்ணையார் திறந்து வைத்தார். சிறப்பு நூற்றாண்டு மலரை ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலசந்திரன் ஆகியோர் வெளியிட, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.விஜயன் ராமலிங்கம், சிதம்பரம் மவுன மடாலய மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில், நடராஜா ஜுவல்லரி உரிமையாளர் ராமநாதன், சுந்தரம், கொடியம்பாளையம் சீரங்க நாட்டார், சுந்தரம், கவரப்பட்டு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்குராமய்யர், முன்னாள் பி.டி.ஓ., இளங்கோ, லால்பேட்டை இஸ்மதுல்லா அபுசாலி, முன்னாள் ஊராட்சி தலைவர் பொட்டு ராசா, ஆசிரியர் ஜெயராமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வைபவ் வாண்டையார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை