உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாமியார்பேட்டையில் மாசிமக தீர்த்தவாரி

சாமியார்பேட்டையில் மாசிமக தீர்த்தவாரி

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை, பெரியக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை, பெரியக்குப்பம் கடற்கரை பகுதிகளில் தீர்த்தனகிரி, சிறுபாலையூர், சிண்ணாண்டிக்குழி, சிலம்பிமங்களம், பெரியாண்டிக்குழி, மணிக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந் சுமார் 30 க்கும் மேற்பட்ட சாமிகள் மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளின.அதேபோல் பெரியக்குப்பம் கடற்கரை பகுதியில் தோப்புக்கொல்லை, பள்ளிநீரோடை, புலியூர்காட்டுசாகை, அனுக்கம்பட்டு, நீராழி, அகரம், கம்பளிமேடு, கோதண்டராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமிகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது.சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கடலில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி