உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழைநீர் தேங்கிய இடங்களை கடலுார் மேயர் பார்வை

மழைநீர் தேங்கிய இடங்களை கடலுார் மேயர் பார்வை

கடலுார் : கடலுார் மாநகரில் பெய்த கனமழையால் பள்ளமான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற மேயர் சந்தரி ராஜா உத்தரவிட்டார்.கடலுார் நகரில் நேற்று முன்தினம் 80.8 மி.மீட்டர் மழை பெய்து. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவ்வாறு தண்ணீர் தேங்கிய வண்ணான்குட்டை, புருேஷாத்தமன்நகர் ஆகிய பகுதிகளை மேயர் சுந்தரி ராஜா பார்வையிட்டார். உடனடியாக மின்மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுமாறு நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.அதன்படி வண்ணான்குட்டை பகுதியில் குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் கடலுார் மாநகரில் மழையால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என நகரம் முழுவதும் ஆய்வு செய்தார். அப்போது, கமிஷனர் காந்திராஜ், மாநகர செயலாளர் ராஜா, சங்கீதா, லெனின் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ