உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டெங்கு பரவல் தடுக்க நடவடிக்கை தேவை

டெங்கு பரவல் தடுக்க நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையின் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் உள்ளதால் பகலில் கடும் வெயில் பாதிப்பும், இரவில் மழையும் பெய்து வருகிறது. திடீர் மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தும் ஏடீஸ் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.எனவே மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், வீடுகள் அருகே சுற்றியுள்ள பிளாஸ்டிக் கழிவு, தேங்காய் சிருட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றவும், டெங்கு பரவுதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு கோரிககை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி