உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உறுப்பினர் சேர்க்கை சேர்மன் துவக்கி வைப்பு

உறுப்பினர் சேர்க்கை சேர்மன் துவக்கி வைப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்கை பணி நடந்தது. சிதம்பரத்தில் நகர தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் காதர்கான் தெரு, சத்யா நகர், அம்பலத்தாடி மடத்தெரு உள்ளிட்ட இடங்களில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், வீடு வீடாக கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.ஒவ்வொரு வீட்டிலும், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற ஸ்டிக்கர் ஓட்டினார். சிதம்பரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன், வார்டு செயலாளர்கள் கார்த்திகேயன், நடராஜன், தில்லை சரவணன், நடராஜன், சரவணன், பாலசுப்பிரமணியன், இளங்கோவன், இளைஞரணி அருள், ஸ்ரீதர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை