உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., இளைஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு

தி.மு.க., இளைஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு

சிறுபாக்கம் : நெய்வேலியில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க கடலூர் மேற்கு மாவட்ட செயலரும், தொழிலாளர் துறை அமைச்சருமான கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உத்தரவின்படி, கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், புதியதாக தி.மு.க., இளைஞரணி நகர, பேரூர், ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அறிமுக கூட்டம் வரும் 9ம் தேதி மாலை 3:00 மணியளவில் நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. இதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை