மேலும் செய்திகள்
வடலுாரில் இரு இடங்களில் 2 பேர் சடலமாக மீட்பு
18-Nov-2025
வடலுார்: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த வி.ஏ.ஓ., மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூராட்சி வி.ஏ. ஓ.,வாக பணிபுரிபவர் வெற்றிவேல். வடலுாரில் வசித்து வரும் இவர் கடந்த, 5ம் தேதி அதே பகுதியில் உள்ள சந்தை தோப்பு கடைக்கு சென்றார். அப்போது சாலையில் கிடந்த மஞ்சள் பை ஒன்றை அவர் எடுத்த போது அதில் ஒரு ரூ.28 ஆயிரம் மற்றும், மொய் கவர்கள் இருந்தது தெரிந்தது. அந்த பணப்பையை அவர், வடலுார் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணையில், வடலுார் கே.ஆர்.,மூர்த்தி நகரை சேர்ந்த ராமலிங்கம், 72; என்பவர் தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் போது பணத்தை தவற விட்டது கண்டறியப்பட்டது. போலீசார் ராமலிங்கத்தின் ஆவணங்களை உறுதி செய்து பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். முதியவர் ராமலிங்கம் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
18-Nov-2025