உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு ஊக்க பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஊக்க பயிற்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான அரசு பள்ளி சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க பயிற்சி அளிக்கப்பட்டது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, டி.இ.ஓ., துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.விழுப்புரம் மாவட்ட கருத்தாளர் ஹரிராமன் கலந்து கொண்டு சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கும் வகையில் பாடம் நடத்தும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 196 அரசு மற்றும் ஆதி திராவிட நலத்துறை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.முடிவில், மங்கலம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரம்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை