உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.பி.அகரத்தில் திட்ட பணிகள்; எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டல்

எம்.பி.அகரத்தில் திட்ட பணிகள்; எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டல்

கடலுார் : எம்.பி.அகரம் ஊராட்சியில் 40 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடலுார் ஊராட்சி ஒன்றியம், எம்.பி. அகரம் ஊராட்சியில் 40 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் துவக்க விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராகிம், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். நிகழ்ச்சியில், முன்னாள் நிலவள வங்கித் தலைவர் ராமலி்ங்கம், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமாரசாமி, மனோகர், தமிழரசி பிரகாஷ், கனகராஜ், சரவணன், பாலசுப்ரமணியம், அழகு, குமார், துணைத் தலைவர் ராமதாஸ், முன்னாள் ஊராட்சி் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சுதாகர், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ