மேலும் செய்திகள்
தில்லை நடராஜரை தரிசித்த வெளிநாடு வாழ் தமிழர்கள்
05-Aug-2025
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி கீழ வீதி ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில் கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கீழ வீதி கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி நேற்று நடராஜர் சன்னதியில், வெள்ளித்தட்டில் தேசிய கொடி வைத்து பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசியக்கொடியை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று, 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில், பொது தீட்சிதர்கள் ஏற்றினர்.
05-Aug-2025