உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தேசிய தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில், வட்டார தொழில் வர்த்தக சங்கம் மற்றும் புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.வர்த்தக சங்கத் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.கவுன்சிலர் ராஜகுமாரி மாரியப்பன் முன்னிலை வகித்தார்.முகாமில், தொழுநோய் பரவும் விதம், அதற்கான சிகிச்சைகள், தொழுநோயை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.முகாமில், மருத்துவ குழுவினர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வேளாண் மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ