உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய இளையோர் தின விழா; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

தேசிய இளையோர் தின விழா; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்: கடலுாரில் தேசிய இளையோர் தின போட்டியில் வென்ற மாணவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.கடலுாரில் நேரு யுவ கேந்திரா சார்பில், தேசிய இளையோர் தினம் மற்றும் விவேகானந்தர் பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்ட இளைஞர் அலுவலர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வாழ்த்திப் பேசினார்.சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.விழாவில், அரசு ஒப்பந்தாரர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா முன்னாள் நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை