| ADDED : ஜன 19, 2024 08:01 AM
புவனகிரி: புவனகிரி இன்று 19 ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்திருந்த மா. கம்யு., கட்சியினர் கோரிக்கை பேச்சு வார்த்தையால் கை விடப்பட்டது.புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 13 முதல் 17 வரை உள்ள வார்டு பகுதிகளில் தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை . இதனால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மா. கம்யூ., சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர்.புவனகிரி போலீசார், தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று சமரச கூட்டம் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் தமிழ்ச்செல்வி, இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை மற்றும் கம்யூ.,கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் செயல் அலுவலர் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ளதாலும், இது குறித்த தகவல்களை அரசுக்கு அனுப்பி உள்ளதால் அனுமதி கிடைத்தவுடன் கோரிக்கைகள் சரி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தார். அதனை ஏற்று இன்று முதல் நடைபெற இருந்த கால வரையற்ற உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.