உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கருத்துக் கேட்பு

என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கருத்துக் கேட்பு

மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கெங்கைகொண்டான் பேரூராட்சி 1,2,3., வது வார்டு பகுதிகளில் உள்ள இடங்கள் கையகப்படுத்துவது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.நெய்வேலி மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிவா ருத்ரய்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தனித் துணை ஆட்சியர் மனோகர், என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ், டி.எஸ்.பி., சபியுல்லா, பொது மேலாளர் சீனிவாச ராகவன், துணை பொதுமேலாளர் சேகர், உதவி பொறியாளர் புகழேந்தி, கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், கவுன்சிலர்கள் வேல்முருகன், புஷ்பலதா அறிவழகன், கலாவேல் முருகன் பொதுமக்கள் பங்கேற்றனர்.அதில், கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினர்களுக்கு என்.எல்.சி.,யில் நிரந்தர வேலை வாய்ப்பு, கூடுதல் இழப்பீடு தொகை, மாற்று இடம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினர்.அதற்கு பதிலளித்த அதிகாரிகள் உங்களது கோரிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும், கோரிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் என்.எல்.,சி., சேர்மனிடம் கலந்து ஆலோசித்து வரும் 17ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ