உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வளர்ச்சி இல்லை: பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வளர்ச்சி இல்லை: பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

சிதம்பரம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய்யை மட்டுமே கூறி வருவதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில், 'என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்ட அவர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., அரசு நான்கு கால் நாற்காலியாக உள்ளது. ஒரு கால் ஜாதி, இன்னொரு கால் ஊழல், மற்றொரு கால் குடும்ப அரசியல், நான்காவது கால் அடாவடியாக உள்ளது.தமிழகத்தில் 31 மாத தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் பொய்யை மட்டுமே கூறி வருகிறார். இத்தொகுதி எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அம்பேத்காருக்கு இணையாக ஒப்பிட்டு பேசுகிறார். கோபாலபுரத்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை தவிர ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது.துண்டு சீட்டை பார்த்து படிக்கும் ஸ்டாலின் அம்பேத்கருக்கு சமமானவரா?சிதம்பரம் லோக்சபா தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. இத்தொகுதி எம்.பி., திருமாவளவன் ஜாதி அரசியல் மட்டுமே செய்கிறார். பட்டியலின பெண்ணை தி.மு.க.,எம்.எல்.ஏ., குடும்பத்தினர் கொடுமைப்படுத்திய விவகாரம் பற்றி எந்த அறிக்கையும் அவர் வெளியிடவில்லை. மோடியை திட்டுவதை முழு நேராக வேலையாக அவர் வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ., மாவட்டத் தலைவர் மருதை, மாநில பட்டியலணி துணைச் செயலாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை