உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஜவுளி கடைக்கு நோட்டீஸ்

 ஜவுளி கடைக்கு நோட்டீஸ்

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சியில் வாடகை நிலுவை, சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத கடைகள், குடியிருப்புகள் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையிலான குழுவினர், ஜங்ஷன் சாலையில் 1 லட்சம் ரூபாய் சொத்துவரி செலுத்தாத ஜவுளி கடைக்கு சீல் வைக்க சென்றனர்.அப்போது, 25 ஆயிரம் ரூபாய் செலுத்திய கடை உரிமையாளர், இரண்டு நாட்களில் மீதமுள்ள தொகையை செலுத்தி விடுவதாக உறுதியளித்தார். அதன்பேரில், கடைக்கு நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள், கட்டத் தவறினால் சீல் வைக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !