உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

பெண்ணாடம், : பெண்ணாடம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.பெண்ணாடம் மேற்கு மெயின்ரோடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் அறுவடை செய்த சம்பா நெல்லை விற்று வருகின்றனர்.நேற்று மாலை 3:30 மணியளவில், சிதம்பரம் அலகு கொள்முதல் அலுவலர் வெங்கடேசன், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொள்முதல் நிலையத்தில் இருந்த எடை இயந்திரம், நெல்லின் தரம், பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, நிலைய எழுத்தர், பணியாளர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ