உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் விபத்தில் முதியவர் பலி

பைக் விபத்தில் முதியவர் பலி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஸ்கூட்டர் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.பண்ருட்டி அடுத்த எல்.ஆர்.பாளையம் மணிநகரை சேர்ந்தவர் நித்தியானந்தம்,75; டீக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை பண்ருட்டி - அரசூர் மெயின்ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு ஸ்கூட்டர், நித்தியானந்தம் மீது மோதியது. பலத்த காயமடைந்த நித்தியானந்தம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, நேற்று அவர் உயிரிழந்தார்.பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை