உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் மர்ம சாவு

முதியவர் மர்ம சாவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பிளேடால் கீறப்பட்ட காயங்களுடன், முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 70; மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் முகம், மார்ப்பு, கை போன்ற இடங்களில் பிளேடால் கீறப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.தகவலறிந்த, பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பன்னீர்செல்வத்தின் மகள் சங்கீதா, 35; கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ