உள்ளூர் செய்திகள்

மூதாட்டி கைது

திட்டக்குடி: திட்டக்குடி அருகே வீட்டில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெருமுளை கிராமத்தில் வீட்டில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி சாரதா, 68, என்பவரை போலீசார் கைது செய்து, 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை