மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
11-Nov-2024
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தை சேர்மன் தேன்மொழி சங்கர் திறந்து வைத்தார்.பரங்கிப்பேட்டை கச்சேரி தெரு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கரிக்குப்பத்தில் உள்ள ஐ.டி.பி.சி.எல்., மற்றும் தமிழ்நாடு பவர் கம்பெனி சார்பில், ரூ. 13 லட்சம் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்டிதரப்பட்டது.அதற்கான, திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு பவர் கம்பெனி தலைமை நிலைய அதிகாரி குகன் தலைமை தாங்கினார். முதன்மை பொது மேலாளர் இளவரசன், பொது மேலாளர் சரவணன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகபிரியா, துணை சேர்மன் முகமது யூனுஸ், முன்னாள் துணை சேர்மன் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். புதிய பள்ளி கூடுதல் கட்டடத்தை, சேர்மன் தேன்மொழி சங்கர் திறந்து வைத்தார்.விழாவில், வட்டார கல்வி அலுவலர் உமாராணி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர்கள் ஆனந்தன், அருள்முருகன், கணேசமூர்த்தி, அஜிஸ், செய்தி தொடர்பாளர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் ராஜ் நன்றி கூறினார்.
11-Nov-2024