பழனிசாமிக்கு வரவேற்பு மண்டல செயலாளர் நன்றி
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலருக்கு வரவேற்பு அளித்த, கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் வழக்கறிஞர் அருண் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, விருத்தாசலம் பாலக்கரையில், நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பொதுச் செயலாளர் பழனிச்சாமி பேசினார். அவருக்கு, சிறப்பாக வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.