உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்னை போராட்டத்தில் பங்கேற்க ஊராட்சி பணியாளர்கள் பயணம்

சென்னை போராட்டத்தில் பங்கேற்க ஊராட்சி பணியாளர்கள் பயணம்

புவனகிரி: தமிழ்நாடு ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நாளை நடக்கும் போராட்டத்தில் போராட்டத்தில், புவனகிரி ஊராட்சி பணியாளர் கூட்டமைப்பினர் பங்கேற்கின்றனர்.புவனகிரியில், ஊராட்சி பணியாளர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் விஜயபாலன் வரவேற்றார். மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி பேசினார். புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி செயலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ரூ. 4ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு, காலமுறை ஊதியம், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம், ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (2ம் தேதி) சென்னையில் நடக்கும் பெருந்திரள் போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ