உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பண்ருட்டி பொதுமக்கள் புகார்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பண்ருட்டி பொதுமக்கள் புகார்

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி லிங்க்ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பண்ருட்டி நகராட்சி லிங்க்ரோடு 18 வது வார்டு பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பில் வரும் குடிநீர் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கடந்த 15 நாட்களாக குடிநீர் சீராக வராமல் துர்நாற்றத்துடன் வருவது குறித்து அப்பகுதி மக்கள் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும், அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தண்டபாணி கூறுகையில் கடந்த 15நாட்களாக குடிநீர் துர்நாற்றத்துடன் வருகிறது. வெளியில் தண்ணீர் பிடித்து தான் பயன்படுத்துகிறோம். நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்றார். அந்த பகுதி மக்களுக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ