உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலீஸ்வரர் சுவாமிக்கு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி

பாடலீஸ்வரர் சுவாமிக்கு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி

கடலுார் : கடலுார் தென்பெண்ணை ஆற்றில், பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆற்றுத் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகரர் பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின், கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீர்த்தவாரி நடந்தது. சந்திரசேகரர் பாடலீஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் குருக்கள் நாகராஜ், ராகேஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ