உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பென்காக் சிலாட் போட்டி கடலுார் அணி சாம்பியன்

பென்காக் சிலாட் போட்டி கடலுார் அணி சாம்பியன்

கடலுார்; மாநில அளவிலான பீச் பென்காக் சிலாட் போட்டியில் கடலுார் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடலுாரில் மாவட்ட பென்காக் சிலாட் சங்கம் சார்பில் மாநில அளவிலான 2வது பீச் பென்காக் சிலாட் எனும் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், கடலுார், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 280 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.பரிசளிப்பு விழாவில், சங்க மாநில பொதுச் செயலாளர் மகேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளையராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் பிச்சைப்பிள்ளை போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கடலுார் அணி வென்றது. புதுக்கோட்டை அணி இரண்டாவது இடம், திருச்சி அணி மூன்றாவது இடம் பிடித்தது.மாநில பொருளாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ