உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி

மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சுற்றியுள்ள கிராமங்களில பரவும் மர்ம காய்ச்சலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரத்தில் துவங்கிய பனி பொழிவால் குழந்தைகள், முதியவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் பரவி வருகிறது. நான்கு நாட்கள் முதல் 7 நாட்கள் வரை காய்ச்சல் தொடர்வதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.எனவே, பரவி வரும் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில், மருத்துவக்குழுவினர், கிராமங்களில் முகாமகள் நடத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை