மேடை அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு
வேப்பூர்: வேப்பூர் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியின் கடைசி மண்டல மாநாடு வரும் 22ம் தேதி, வேப்பூர் அடுத்த திருப்பயரில் நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக, திருப்பயரில் மேடை அமைக்க இடத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டார். பந்தல் அமையும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தாசில்தார் மணிகண்டன், டி.எஸ்.பி., மோகன், பி.டி.ஓ., முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜவேல், தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன், கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.