உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பா.ம.க., கடலுார் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

 பா.ம.க., கடலுார் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க.,செயற்குழு கூட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிவேல் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, கோபால கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், கார்த்திகேயன், கலைநைனார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும் 29ம் தேதி வடலுாரில் நடக்கும் பா.ம.க., கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் டாக்டர் ராமதாஸை வரவேற்பது; எஸ்.ஐ.ஆர்.,பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களை தெளிவுபடுத்த முடிய வில்லை என்பதால் எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணிகளுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்; மாவட்டத்திலுள்ள மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் துாய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், கிராமங்கள் தோறும் மருத்துவமுகாம்கள் நடத்த வேண்டும்; என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் பாலகுரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை