மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
02-Nov-2025
கடலுார்: இளம்பெண் காணாமல் போனது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். குறிஞ்சிப்பாடி அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் மாலதி,20; இவர் ஓராண்டு, டிப்ளமோ நர்சிங் கோர்ஸ் படித்துள்ளார். கடலுாரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஓராண்டாக, வேலை பார்த்து வந்தார். கடந்த 5ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Nov-2025