உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பொங்கல் விழா

வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பொங்கல் விழா

கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். விழாவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், மாணவ மாணவிகளின் வில்லுப் பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடந்தது. பாரம்பரிய விளையாட்டுகளான உறி அடித்தல், பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல், பல்லாங்குழி, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை