உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொங்கல் விளையாட்டு விழா

பொங்கல் விளையாட்டு விழா

விருத்தாசலம், -காணும் பொங்கலையொட்டி, விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பத்தில் விளையாட்டு விழா நடந்தது.இதில், மினி மாரத்தான், கோலப்போட்டி, வாலிபால், ஓட்டப்பந்தயம், கபடி, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், வழக்கறிஞர்கள் சம்பத், அருண்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் கர்ணன், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜாங்கம், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் செல்வக்குமார், பாலமுருகன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !