உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

பெண்ணாடம்: ரயில்வே மேம்பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இச்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில், விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில் அடிக்கடி 'கேட்' போடுவதால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் கடந்த, 2010ல் மேம்பாலம் பணி துவங்கி, 2016ல் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது இந்த மேம்பாலத்தில் போதிய பராமரிப்பின்றி தரைத்தளத்தில் பல இடங்களில் கான்கிரீட் சிமென்ட் காரைகள் பெயர்ந்து 'மெகா' பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ