உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையம் பகுதியில் பானை செய்யும் பணி ஜரூர்

சி.என்.பாளையம் பகுதியில் பானை செய்யும் பணி ஜரூர்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு பகுதியில் பொங்கல் பானை செய்யும் பணி ஜரூராக நடந்து வருகிறது.தமிழர்களின் பாராம்பரிய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே பன்னீர்கரும்பு,பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது பாரம்பரியமாக நடந்து வருகிறது.கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலில் விறகு அடுப்பில் பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கமாககும். இதற்காக சி.என்.பாளையம் மற்றும் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள மண் பாண்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாகவே பானை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ளதால் மண் பாண்ட தொழிலாளர்கள் பானைகளை செய்யும் பணியினை ஜரூராக செய்து வருகின்றனர். பானைகளை ஒரு சில தினங்களில் சூளையில் வைத்து வேகவைக்க வேண்டும். இதற்கான விறகுகளை காயவைத்துள்ளனர்.நேற்று இப்பகுதியில் மழை பெய்ய துவங்கியதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விறகு நனைந்தும்,செய்த பானைகளை அடுக்கி வைக்க இடமின்றி அவதியடைந்தனர்.இந்த மழைவிட்டதும் பானைகளை வேக வைக்கும் பணியினை துவங்கிட உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி