உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா பள்ளிக்கு பதக்கம் வழங்கல்

ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா பள்ளிக்கு பதக்கம் வழங்கல்

கடலுார்: சென்னையில் நடந்த அறிவியல் திருவிழாவில், வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.சென்னையில் மண்டல அளவில் 'நாளைய விஞ்ஞானி' என்ற தலைப்பில் அறிவியல் விழா நடத்தப்பட்டது. இதில், 175க்கு மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் சி.பி.எஸ்.சி.பள்ளியின் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் இரண்டாவது இடம் பிடித்தனர். இவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !