உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சிறையில் கைதிகள் மோதல்

கடலுார் சிறையில் கைதிகள் மோதல்

கடலுார் : கடலுார் மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறித்து, கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் சென்னை எண்ணுாரை சேர்ந்த கார்த்தி (எ) குள்ளகார்த்தி, 25; சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார்,36, என்பவரும் விசாரணை கைதிகளாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சிறைக்காவலர்கள் இருவரையும் விலக்கிவிட்டு தனித்தனி அறையில் அடைத்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை