உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மேலாண் குழு தலைவிக்கு பரிசு

பள்ளி மேலாண் குழு தலைவிக்கு பரிசு

புவனகிரி : விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில், சிறப்பிடம் பெற்ற ஊராட்சி ஒன்றிய கல்வி மேலாண்மை குழு தலைவியை கலெக்டர் பாராட்டினார்.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவில் புவனகிரி அடுத்த சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை, கலெக்டர் அருண்தம்புராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமிக்கு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன், புவனகிரி வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, லட்சுமி மற்றும் தலைமை ஆசிரியர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை