உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து துணிகர திருட்டு

பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து துணிகர திருட்டு

பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்,50; சேலம் தனியார் கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி,48; தனியார் பள்ளி ஆசிரியை. ராஜேஸ்வரி நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பீரோவில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது. முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ