உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தயாளன், நடராஜன், சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., சிறப்பு தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் முருகன், நிர்வாகிகள் மணிமாறன், கண்ணுசாமி, தட்சணாமூர்த்தி, கோபிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்க வேண்டிய டி.ஏ., நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் அரும்பாலன், கண்ணன், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பழனிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jayvee
ஜன 31, 2024 18:37

முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இது பற்றி வரையே திறக்கவில்லை... இன்னுமா அந்த 25 கோடி பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் ?


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி