மேலும் செய்திகள்
வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு
29-Jul-2025
கடலுார் : கடலுார் செங்காட்டு காலணி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கடலுார் வட்டம், கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட செங்காட்டு காலணி, எம்.ஜி.ஆர்., நகர், கரிக்கன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் இலவச மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனவே, இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என, வலியுறுத்தி வரும் 1ம் தேதி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
29-Jul-2025